வீடு கட்ட வேண்டும் என்று ஆசை படக்கூடிய ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய முக்கியமான கடவுளை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த கடவுளை வணங்கினால் நிச்சயமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடியவர்கள் கூட எளிதில் வீடு கட்ட வாய்ப்புகள் அமையும் வாருங்கள் பார்ப்போம்.
ஒருவரிடம் பணம் இருக்கும் ஆனால் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் அமையாது தள்ளிக்கொண்டே போகும், சில பேரிடம் பணம் இருக்கும் கட்டுவதற்கான இடம் இருக்கும் ஆனால் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் போய்க் கொண்டிருக்கும், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் கடவுளினுடைய அனுகிரகம் ஒருவருக்கு மிக மிக முக்கியம் அந்த அனுகிரகம் இருக்கக்கூடியவர்கள் மட்டுமே வாழ்க்கையில் நினைத்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கடவுளுடைய அனுகிரகம் நமக்கு வேண்டும், அதனால் நாம் வீடு கட்ட வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயமாக செவ்வாய் பகவானை வணங்க வேண்டும்.
எப்படி செவ்வாய் பகவானை வணங்குவது
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று நவகிரகத்தில் செவ்வாய் பகவான் இருப்பார் அந்த செவ்வாய் பகவானுக்கு மஞ்சள் நிற பூவை வைத்து 9 முறை சுற்றி வந்து நெய் தீபத்தை ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றி மனமார அவரிடம் வேண்டுவதன் மூலமாக எளிதில் உங்களுக்கு வீடு கட்டுவதற்கான பாக்கியம் கிடைக்கும்.
அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களுடைய வீட்டில் பூஜை அறையில் ஒரு பலகையை வைத்துவிட்டு அதன் மீது மஞ்சள் நிற துணியை விரித்துப் போட வேண்டும் அதற்கு மேல் செவ்வாய் பகவானின் புகைப்படத்தை வைத்து, அந்த புகைப்படத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு மஞ்சள் நிற மாலையை சாத்த வேண்டும். பிறகு அந்த புகைப்படத்திற்கு முன்பாக ஒரு நெய் விளக்கு ஏற்றி மனதார செவ்வாய் பகவானை நினைத்து எளிதில் வீடு கட்ட எனக்கு வாய்ப்பு கொடுங்கள் தேவா என்று மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். எத்தனை வாரங்கள் இந்த பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால் உங்கள் ஆசை நிறைவேறும் வரை நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செவ்வாய் பகவானை நினைத்து பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக வீடு கட்ட முடியும்.
ஆண் பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் குறிப்பாக யார் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்களோ அவர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக நிச்சயமாக ஒரு நல்ல பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.
செவ்வாய் பகவானை வணங்க முடியாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானுக்கு மஞ்சள் நிற பூவை சாற்றி மனமார வேண்டுவதன் மூலமாக நமக்கு வீடு கட்டும் பாக்கியம் கூடிவரும் என்பது ஐதீகம். சகல நன்மைகளையும் வாரி வழங்கும் முருகப்பெருமாள். அதனால்தான் நம் தமிழர்கள் முருகனைத் தமிழ் கடவுள் என்று அழைக்கின்றார்கள். நமக்கு எது நன்மை என்று அனைத்தையும் தெரிந்தவன் முருகன் அதனால் முருகனிடம் வேண்டும்போது நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நமக்கு கிடைக்கும் குறிப்பாக வீடு வேண்டும் என்றால் அகல் விளக்கில் நெய்திபமேற்றி முருகப்பெருமானிடம் மனதார வென்றுங்கள் நிச்சயமாக எண்ணி ஒரு வருடத்தில் உங்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கைகூடிவரும்.
Post Views: 205
Related