விநாயகர் தினத்தன்று எந்த வடிவில் விநாயகரை செய்து நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் அல்லது விநாயகர் சதுர்த்தி அல்லாத நாட்களில் நாம் எந்த வடிவில் விநாயகரை வைத்து வழிபாடு செய்தால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக பார்க்கப் போகின்றோம்.
மஞ்சள் – விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும்
உப்பு – உப்பில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
குங்குமம் – குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விளங்கும்.
வெள்ளெருக்கு – வெள்ளெருக்கு பூவில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தீவினைகள் நீங்கும்.
சந்தனம் – சந்தனத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் குழந்தையின்மை நீங்க குழந்தை பிறக்கும்.
பசுவின் சாணம் – பசுவின் சாணத்தால் விநாயகர் பிடித்து வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி சுப நிகழ்வுகள் நடைபெறும்.
வெண்ணை – வெண்ணையில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கும்.
வாழைப்பழம் – வாழைப்பழத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் வம்சம் விருத்தியடையும்.