திருமணம் என்பது உலகில் பிறந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி மிக மிக முக்கியம். திருமண வாழ்க்கை அமைவதன் மூலமாக அவர்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள் அப்படிப்பட்ட திருமணம் எளிதில் ஒருவருக்கு அமைவது கிடையாது. அப்படி திருமணம் தடைகள் இருக்கக்கூடியவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.
திருமணம் தடைப்பட்டு போவதற்கு பல காரணங்கள் உண்டு, ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் தோஷங்கள் இருக்கிறதா என்று முதலில் நாம் பார்க்க வேண்டும் அப்படி தோஷங்கள் இருந்தால் திருமணம் தடை ஏற்படும். அதனால் திருமணம் தள்ளி போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, அதற்காக சில பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தோஷங்களினுடைய வீரியம் குறைந்து நமக்கு நல்ல பலன்கள் கிடைத்து திருமண யோகம் நமக்கு அமையும்.
திருமணம் எளிதில் நடக்க நாம் வணங்க வேண்டிய மிக முக்கியமான கடவுளாக முருகப்பெருமான் விளங்குகின்றார். குறிப்பாக முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையன்று வணங்குவது விசேஷமானது, நாம் எதிர்பார்க்கும் நல்ல வரன்கள் அமைய எல்லாம் வல்ல முருகர் துணை நின்று நம்மை ஆசீர்வதிப்பார் அதனால் நமக்கு எளிதில் திருமணம் நடக்கும்.
முருகப்பெருமானை எப்படி வணங்க வேண்டும்
உங்களுடைய பூஜை அறையில் முருகர் வள்ளி தெய்வானை மூன்று பேரும் சேர்ந்தது போல இருக்க கூடிய ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்..
முதலில் ஒரு மனையைப் போட்டு அந்த மனைக்கு மேல் மஞ்சள் கலர் துணியை விரித்து வைக்க வேண்டும் அதற்கு மேல் முருகர் வள்ளி தெய்வானை மூன்று பேரும் சேர்ந்த புகைப்படத்தை வைக்க வேண்டும் அப்படி வைத்த முருகர் புகைப்படத்திற்கு குங்குமம் மஞ்சள் இட்டு மாலை சாற்ற வேண்டும். அப்புறம் முருகர் புகைப்படத்திற்கு முன் ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும் அப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு..
நீங்கள் நன்றாக குளித்து முடித்த பிறகு பட்டை இட்டுக்கொண்டு அந்த முருகர் புகைப்படத்திற்கு முன் விளக்கு ஏற்றிய பிறகு மனதார முருகனை பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி உங்களுடைய பூஜை அறையில் முருகர் புகைப்படத்தை வைத்து பிரார்த்தனை செய்யும்போது சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைத்து எளிதில் திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
தினமும் வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் முருகருக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை அன்று முருகர் கோவிலுக்கு சென்று முருகருக்கு அகல் விளக்கில் தீபம் ஒன்று வைத்து முருகரை மனமார வேண்டிக் கொண்டு மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வளம் வந்தால் நிச்சயமாக திருமணம் தடைப்பட்டு இருந்தால் சீக்கிரமாக திருமணம் நடக்கும்.