உத்திரம் நட்சத்திரம் குணங்கள் / Uthiram Natchathiram Kunangal ( Character) in tamil

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:
இவர்கள் சிறந்த மனவலிமை கொண்டவர்கள்.
எதிலும் நேர்மையான குணநலன்களை உடையவர்கள்.
கம்பீரமான நடைகளை கொண்டவர்கள்.
சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள்.
செய்த உதவியை மறவாதவர்கள்.
கல்வியில் ஆர்வம் உடையவராக இருக்கக்கூடியவர்கள்.
எதிர்பாலினத்தவரை கவரும் உடலமைப்பு இருக்கும்.
இறைநம்பிக்கை அதிகம் உடையவர்கள்.
பொருள் சேர்ப்பதில் வல்லவர்கள்.
தலைமை தாங்கும் குணம் அதிகமாக இருக்கும்.
எதிலும் சிக்கனமாக செயல்படக்கூடியவர்கள்.
திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள்.
உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கனிவாக பழகும் தன்மை கொண்டவர்கள்.
சுயமரியாதை அதிகம் உடையவர்கள்.
தவறென்று தெரிந்தால் தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர்கள்.
அனுபவ அறிவு அதிகம் உடையவர்கள்.
பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.
உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
அனைவரிடத்திலும் கண்ணியமாக பழகக்கூடியவர்கள்.