உடல் எடையை எளிதில் குறைப்பது எப்படி மற்றும் உடல் எடையை குறைப்பதற்கான உணவு முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக உடல் எடை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக அமைகிறது. அதாவது மெலிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. நாமும் என்னென்ன வழிகளில் தெரியுமோ அத்தனை வழிகளிலும் முயற்சி செய்திருப்போம். ஆனாலும் நம்முடைய உடல் எடை என்பது குறைந்து இருக்க வாய்ப்பு இருக்காது இருப்பினும் நாம் என்ன உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் எளிதில் உடல் எடையை குறையும் என்பதை பற்றி பார்ப்போம்.
உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு முறை:
1. முதலில் இனிப்புகளை நாம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக உணவு உட்கொண்ட பிறகு இனிப்புகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல இனிப்புகளை சாப்பிட்ட உடனடியாக தூங்கும் பழக்கத்தை யும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும்.
2. உடல் எடையை குறைக்க எண்ணெய் பொருள் அதாவது போண்டா வடை பஜ்ஜி இதுபோன்ற எண்ணையில் இயங்கக் கூடிய பொருளை உட்கொள்ளக்கூடாது. அதேபோல அதிக பசி எடுக்கும் போது வயிறு காலியாக இருக்கும் போது எந்த எண்ணை பலகாரத் தையும் உட்கொள்ளக்கூடாது.
3. தினமும் காய்கறிகள் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிச வகை எதுவாக இருந்தாலும் குறிப்பாக தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே மாமிசம் எடுத்துக்கொள்ளவேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை நான்கு முறை என்ற பழக்கத்தை தவிர்த்து விட வேண்டும்.
4. ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, அண்ணாச்சி பழம், இதுபோன்ற பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
5. தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு சொம்பு அளவிற்கு தண்ணீரை அருந்த வேண்டும், இது நம் வயிற்றில் இருக்கக்கூடிய அத்தனை கொழுப்புக்களையும் கரைக்கும் குறிப்பாக இரவு தூங்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு சொம்பு குடித்து விட்டு தூங்கும் பொழுது நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய அத்தனை கொழுப்புக்களும் கரையும்,
6. மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, அதிகமாக கொழுப்புகள் இருக்கக்கூடிய இறைச்சிகளை தவிர்த்துவிட்டு மீன் போன்ற கொழுப்புகள் இல்லாத மாமிசத்தை எடுத்துக்கொள்ளலாம். மாமிசம் வாரத்திற்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது
7. தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது அப்படி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தினமும் அதிகாலையில் அல்லது மாலை நேரத்தில் வாக்கிங் அதாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
8. நீங்கள் சாப்பிட்ட உடனே தூங்குவதை தவிர்க்க வேண்டும், நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது அது நம்முடைய எடை கூடாமல் பார்த்துக் கொள்ளும்.
9. முடிந்தவரை தினமும் ஏதாவது ஒரு காய்கறி பொரியலை தினமும் உங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
10. மாதத்திற்கு ஒரு முறை 24 மணி நேரம் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டுமே குடித்து கொண்டு விரதம் இருக்கவேண்டும். அது நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கும் நம் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு அந்த நீர் நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.