எந்த இடத்தில் உங்களுடைய பணப்பெட்டியான பீரோ அல்லது பணப்பெட்டி இந்த இரண்டையும் எந்த இடத்தில் வைத்தால் பணம் அதிகமாக சேரும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
பணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான விஷயமாக இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுகிறது. இன்னும் தெளிவாக சொன்னால் பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றன இல்லையென்றால் சொந்தக்காரர்கள் கூட இன்றைய காலகட்டத்தில் மதிப்பது கிடையாது.
நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் நம் வீட்டில் பணம் தங்குவதில்லை அதற்கு காரணம் நம்முடைய பணப்பெட்டி நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த வகையில் இன்று நாம் பணத்தை சேமித்து வைக்கக்கூடிய பணப்பெட்டி எந்த இடத்தில் வைத்தால் நமக்கு செல்வம் பெருகும் என்பதை பற்றி அடுத்தடுத்து தெரிந்து கொள்ள போகின்றோம், வாருங்கள் பார்ப்போம்.
இப்போது புதிதாக கட்டக்கூடிய பெரும்பாலான வீடுகளில் வாஸ்து பிரகாரம் கட்டுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அங்கங்க பணப்பெட்டிகள் வைக்கப்படுகிறது இருந்தாலும் நம் வீட்டில் குபேர மூலையில் பணப்பெட்டி இருக்கிறதா என்பதை பற்றி நாம் கொஞ்சம் தெளிவாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல உங்களுடைய பணப்பெட்டியில் இருந்து நீங்கள் பணத்தை வைக்கும் போது முழுமையாக வைக்க வேண்டும். அதாவது நீங்கள் சம்பாதித்த வருமானம் இன்று உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அந்த முழு பணத்தையும் செலவு செய்து விடக்கூடாது, உங்கள் கைக்கு வந்த உடன் அதை எடுத்துக்கொண்டு பீரோவில் அல்லது பணப்பெட்டி வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்த பணத்தை எடுக்கும் போது முழுமையாக எடுத்து விடக்கூடாது அந்த பணப்பெட்டியில் சிறிது பணத்தை அங்கு வைக்க வேண்டும் அது லட்சுமி வாசம் செய்யும் இடம் அதனால் இந்த பழக்கத்தை நீங்கள் கொண்டு வர வேண்டும்.