கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் நம் வீட்டில் நம்முடைய அம்மாக்களும் சரி பாட்டிகளும் சரி நம்முடைய முன்னோர்களும் சரி, இஞ்சிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்திருப்பார்கள் அதற்கு காரணம் இஞ்சியின் மருத்துவ குணங்கள் கணக்கில் அடங்காத அளவிற்கு இருக்கின்றன இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் இஞ்சி எந்த அளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
★ இஞ்சிச்சாறுடன் பாலை கலந்து உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்
★ பாலையும் இஞ்சிச் சாறையும் காய்ச்சி கலந்து வெள்ளம் நெய் திப்பிலி பொடி ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு வரும் வயிற்று இடுப்பு நோய்கள் நீங்கும்
★ இஞ்சி துவையல் செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது
★ இஞ்சி பச்சடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட வயிற்று வலி கபம் களைப்பு நீங்கும்