திருமணத் தடை நீங்கி எளிதில் நல்ல வரன் கிடைக்க செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை இன்று நாம் பார்க்க போகின்றோம்
1. திருமணம் எளிதில் நடக்க.
2. நல்ல வரன் அமைய.
3. திருமண தடை நீங்கி.
4. ஆண், பெண் திருமணம் பொருந்த.
திருமணம் என்பது கடவுளால் நிச்சயக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த திருமணம் சிலருக்கு எளிதில் கிடைத்துவிடும் சிலருக்கு பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் அமையும். அப்படி திருமணம் எந்த தடையும் இல்லாமல் ஒருவருக்கு நடக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரத்தை இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
திருமண தடை:-
திருமண தடை என்பது சிலரது ஜாதகத்தைப் பொறுத்து சிலருக்கு மாறுபடும் உதாரணத்திற்கு ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்கும் அல்லது செவ்வாய் தோஷம் இருக்கும் அல்லது நாகதோஷம் இருக்கும் இப்படி ஏதாவது தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் இருக்கிறதா என்பதை நாம் முதலில் ஒரு நல்ல ஜோசியரிடம் கொண்டு போய் நம் ஜாதகத்தைக் காட்டி அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சில ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் அதற்கான பரிகாரத்தை செய்வதன் மூலமாக நம்முடைய நல்ல நேரம் கூடிவரும்
பரிகாரம்:-
நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி வைத்திருக்கின்றான் அதில் நம் திருமண தடை நீங்க அவர் பாடிய பாடலை இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறம்
உங்களுடைய வீட்டில் முருகர் தெய்வானை-வள்ளி இந்த மூன்று பேரும் சேர்ந்து இருப்பது போல ஒரு புகைப்படத்தை வைத்துக்கொள்ள வேண்டும் அந்த புகைப்படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு அருணகிரிநாதர் பாடிய அந்த திருப்புகழை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் துதிக்க வேண்டும்
திருப்புகழ் 1
திருப்புகழ் 2
இந்த திருப்புகழை யாருக்கு திருமணம் நடக்க வேண்டுமோ அவர்கள் வாயால் இந்த திருப்புகழைப் பாடினால் பலன் அதிகபட்சமாக அவர்களிடம் போய் சேரும்
அப்படி திருமணம் ஆக வேண்டிய பிள்ளைகள் இந்த திருப்புகழைப் பாட முடியவில்லை என்றால் அவர்களுடைய பெற்றோர்கள் பாடலாம் ஆனால் குறிப்பாக திருமணம் ஆக வேண்டிய அவர்கள் வாயால் பாடுவது என்பது பலன் அதிகரிக்கும் என்பது ஐதீகம்
தினமும் இந்த திருப்புகழை சொல்லிவர ஆறு மாதத்தில் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்..