ஆண் பெண் இருவரும் தங்களுடைய காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக
ஆண்களும் பெண்களும் தங்களுடைய கால்களில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் அதற்கு காரணம் உண்டு. ஒரு நெகட்டிவ் எனர்ஜி என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு வகையான மன அழுத்தத்தை நம்முடைய மனமே உருவாக்கிக் கொள்ளுமா, அதனால் நம் முன்னோர்கள் யோசித்தார்கள் இவர்களை என்ன செய்வது என்று. அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் ஒருவர் பார்க்கக் கூடிய பார்வையை வைத்து அது நல்லதா கெட்டதா என்று உன் மனம் தீர்மானித்து புலம்புகிறது. அதை அடக்குவதற்காக கால்களில் கருப்பு கயிறு கட்டினால் மற்றவர்கள் பார்க்கக்கூடிய, மற்றவர்களால் ஏற்படுகின்ற கண் திருஷ்டியை போக்கும் என்ற ஐதீகத்தை கொண்டு வந்து ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் கருப்பு கயிறு கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு அறிவியல் பூர்வமான சில விஷயங்கள் ஒளிந்து இருந்தாலும் உண்மையான விஷயம் என்னவென்றால்.
கருப்பு கயிறு காலில் கட்டுவதன் மூலமாக கண் திருஷ்டிகள் குறையும் ஆண்களாக இருந்தால் இடது கால் பெண்களாக இருந்தால் வலது கால்.
கால்களில் கயிறு கட்டிக் கொள்வதன் மூலமாக நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதை பார்த்து இவர்கள் இந்த காரியத்தை செய்தார்கள் என்று ஆச்சரியப்பட்டு உங்கள் மீது கண் திருஷ்டிகளை கொட்டினால் அந்த கயிறை பார்க்கும் போது அவர்கள் மனதில் எழக்கூடிய அந்த கண் திருஷ்டியானது தடைபட்டு போகும்.





















