ஆடிக்கிருத்திகை ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் மிக மிக முக்கியமான நாள் இந்த நாள் ஒவ்வொருவர் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை துன்பங்களையும் போக்கக்கூடிய அற்புதமான நாள் ஆடி கிருத்திகை. ஆம் இன்று இந்த பதிவில் ஆடிக்கிருத்திகை என்று பெயர் வர காரணம் ஆடிக் கிருத்திகை மிக முக்கியமான நாளாக கருதப்படக் கூடிய காரணம் என்ன என்பதை பற்றியும், எப்படி நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
முருகருடைய அம்மா பார்வதி தேவி முருகப்பெருமானை அரக்கனிடமிருந்து காத்து வளர்ப்பதற்காக யாருக்கும் தெரியாமல் முருகனை பாலகனாக வளர்ப்பதற்காக ஒரு திட்டத்தை தீட்டினார், அந்த திட்டம் தான் கார்த்திகை பெண்கள் தன்னுடைய குழந்தையான முருகனை ஒரு கார்த்திகை பெண்ணிடம் கொடுத்து வளர்க்கும்படி கேட்டுக் கொண்டால் பார்வதி அம்மாள். ஆனால் ஆறு கார்த்திகை பெண்கள் இருந்தார்கள் முருகப்பெருமான் ஒருவராக இருந்தார் அந்த முருகப்பெருமான் வளரும் போது ஆறு கார்த்திகை பெண்களுக்கும் ஆசை வந்துவிட்டன, தாய்மை உணர்வு வந்து விட்டன எனக்கு முருகப்பெருமான் வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தன. அந்த எண்ணத்தை புரிந்து செய்ய முருகப்பெருமான் ஆறு குழந்தைகள் உருவத்தை எடுத்து ஒவ்வொரு கார்த்திகை பெண்ணிடமும் வளர ஆரம்பித்தார் முருகப்பெருமான். பிற்காலத்தில் பாலகனாக இருந்து இளைஞனாக வளர்ந்த முருகப்பெருமான் தன் தாயிடம் சென்றார். தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களை மரியாதை செலுத்தும் விதமாக கார்த்திகை தீபம் என்று சொல்லப்பட்டு ஆடிக்கிருத்திகையை அவர்களுடைய நாளாக வழிபடுவார்கள் என்று கார்த்திகை பெண்களுக்கு ஆசீர் வழங்கினார் முருகப்பெருமாள். அதனால் தான் ஆடிக்கிருத்திகை கார்த்திகை பெண்களுக்கான மிக முக்கியமான நாள் இந்த நாளன்று நாம் முருகப்பெருமானை வணங்கும்போது சகல ஐஸ்வரியமும் நமக்கு கிடைக்கும் என்று ஐதீகம்.
ஆடிக்கிருத்திகை முருகரை வழிபடுவது இன்று நேற்று தொடங்கிய விஷயம் அல்ல நம் முன்னோர்கள் என்று வாழ ஆரம்பித்தார்களோ அன்றே முருகப்பெருமானை வணங்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் தான் முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்பட்டார். கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த குடிகள் ஆகிய தமிழர்கள் அன்றிருந்தே முருகனை வணங்க ஆரம்பித்து ஆடி கிருத்திகையை கொண்டாட ஆரம்பித்தனர். அந்த வழியில் நாமும் முருகப்பெருமானை வணங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும் கூட.
முருகப்பெருமானை வணங்குவதால் நிச்சயமாக இன்று ஆடி கிருத்திகை அன்று உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய முருகன் படத்திற்கு பூமாலை அணிந்து பொட்டுகழ் வைத்து அலங்காரங்கள் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு அவரை நினைத்து விளக்கேற்றி சாம்பிராணி உதபத்தி இது போன்ற விஷயங்களை ஆராதனையாக காட்டி அவரை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளலாம் போதும். அப்படி இல்லை என்றால் நம் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை நேரில் சந்தித்து மனமார அவருக்காக ஒரு விளக்கேற்றி அவரை வேண்டிக் கொண்டால் சகல நன்மைகளும் நமக்கு கிடைக்கும் குறிப்பாக ஆடி கிருத்திகை அன்று வேண்டினால் துன்பங்கள் தீரும்.
ஆடிக்கிருத்திகை அன்று வேண்டினால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், நம்முடைய வாழ்க்கை எப்படி முருகப்பெருமான் கார்த்திகை பெண்களுடன் வளர்ந்து நமக்கு ஆசி வழங்குகின்றாரோ அதுபோல நம்முடைய வாழ்க்கையும் செல்வ செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் நம் உடம்பில் இருக்கக்கூடிய நோய்கள் பிணிகள் எல்லாம் தீரும் என்பதும் ஐதீகம், தொழில் வளர்ச்சி, குடும்ப கஷ்டம், ம மனபாரம் இப்படி எது இருந்தாலும் நம் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வணங்குவதால் எல்லாவித நன்மைகளும் நமக்கு கிடைக்கும்…