ஆடி அமாவாசை ஒவ்வொருவருக்கும் மிக உகந்தநாள், ஒவ்வொருவரும் தன்னுடைய முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய மிக முக்கியமான நாள். முருகப்பெருமானை நினைத்து வேண்டுவதால் சகல நன்மைகளும் கிடைக்கக்கூடிய நாளாக ஆடி அமாவாசை பார்க்கப்படுகிறது. நாம் இன்று இந்த ஆடி அமாவாசையின் சிறப்புகளை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஆடி அமாவாசை நம் முன்னோர்களுக்கு மிக முக்கியமான நாள் நம் முன்னோர்கள் அதாவது நம் வீட்டில் மறைந்து போன நம்முடைய முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக பூஜை செய்து அவர்களை வணங்குவதால் நம் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஆம் நம் முன்னோர்கள் வானத்திலிருந்து நமக்காக உணவு வைத்தார்களா நமக்காக படைத்தார்களா என்று நம் வீட்டை கவனித்துக் கொண்டிருப்பார்களாம் ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களை நினைத்து படைக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் நம் வீட்டிற்கு வந்து பார்த்து நம்மை மறந்து விட்டார்கள் நம்மை நினைத்து ஒரு பூஜை கூட செய்யவில்லை நமக்கான உணவுகளை கூட படைக்கவில்லை என்று மனம் நொந்து போய் திரும்ப அழுது கொண்டு செல்வார்களாம் வானத்திற்கு. அதனால் தான் ஒவ்வொரு அமாவாசை அன்று நம் முன்னோர்களின் நினைத்து ஒரு பிடி சாதத்தை காக்கைக்கு நாம் உணவாக கொடுக்கின்றோம் அதனால் நம் முன்னோர்களின் உடைய நன்மைகள் அவர்களுடைய ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த ஆடி அமாவாசை அன்று ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வீட்டில் நீங்கள் சமைக்க கூடிய உணவையே எடுத்துக் கொண்டு பகவானை நினைத்து வேண்டி நம் முன்னோர்களை நினைத்து வேண்டி என் குடும்பத்தை காத்து அருளுங்கள் என் முன்னோர்களை என்று நம்மை விட்டு மறைந்தவர்களை நினைத்து மனமார வேண்டி அவர்களுக்கு ஒரு வாய் சாதத்தை வைத்து, படைத்து அந்த சாதத்தை எடுத்துக் கொண்டு வந்து காக்கைக்கு வைப்பதன் மூலமாக நமக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். அதாவது நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வந்து பார்ப்பார்கள் அப்படி நாம் அவர்களுக்கான படைகளை போடும்போது மன திருப்தியோடு நமக்கு ஆசீர்வாதம் கொடுப்பார்கள். அந்த ஆசீர்வாதம் நம்மை நோய் நொடியில் இருந்து காப்பாற்றி செல்வ செழிப்போடு வாழவைத்து வழிநடத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அதனால் ஆடி அமாவாசை என்று உங்கள் முன்னோர்களை நினைத்து நீங்கள் படையில் இட்டு மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.
இந்த ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வேண்டி நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்து பிறகு மாலை நேரத்தில் முருகப்பெருமானை சந்தித்து அவருடைய விக்கிரகத்தை ஒரு மூன்று முறை சுற்றி வந்து மனதார வேண்டினால் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான வசதிகள் கிடைக்கும் தொழில் வளர்ச்சி இல்லாதவர்களுக்கு தொழில் வளர்ச்சி கிடைக்கும் இப்படி சகல நன்மைகளையும் முருக பெருமான் நமக்கு வாரி வழங்குவார் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.
பக்தர்களாகிய நீங்கள் ஆடி அமாவாசையை தவறவிடாமல் ஒவ்வொருவரும் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்ட பிறகு மாலை நேரத்தில் முருகப்பெருமானையும் அதே சமயத்தில் வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நலமோடு வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரினுடைய விருப்பமும் கூட.