அவிட்டம் நட்சத்திரம் குணங்கள் / Avittam Natchathiram Kunangal ( Character) in tamil

அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவராக இருப்பார்கள்.
சிக்கனமாக செலவு செய்து வாழக்கூடியவர்கள்.
அழகான தோற்றம் கொண்டவர்கள்.
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படக்கூடியவர்கள்.
எவரிடத்திலும் பயம் இல்லாதவர்கள்.
எச்சரிக்கை உணர்வு அதிகம் உடையவர்கள்.
முன்கோபம் உடையவர்கள்.
பேச்சுக்களில் வேகமும், செயல்பாடுகளில் நிதானமும் கொண்டவர்கள்.
எதிலும் துணிச்சலுடன் செயல்படக்கூடியவர்கள்.
தியாக மனப்பான்மை உடையவர்கள்.
துணையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.
அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்கள்.
இளகிய மனம் உடையவர்கள்.
தனது காரியத்தில் விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள்.
தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்கள்.
புதுவிதமான சிந்தனைகளை உடையவர்கள்.
செல்வாக்கு உடையவர்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.
பலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.
பெற்றோர்களின்மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
வைராக்கிய குணம் கொண்டவர்கள்.