வயிற்றில் ஏற்படுகின்ற அல்சர்(Ulcer) என்று சொல்லப்படுகின்ற வயிற்றுப் புண் சீக்கிரமாக குணமாவதற்கு, அந்த புண் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றியும் இன்று இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக வயிற்றில் வலி ஏற்பட்டால் அல்லது எரிச்சல் ஏற்பட்டால் வயிற்றுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரைக்கும் ஒரு வகையான எரிச்சல் உணர்வு ஏற்படும், எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாதது போல் ஒரு உணர்வு ஏற்படும், நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் வலி, நெஞ்சு அடைப்பு, மூச்சுத்திணறல் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அப்போது நாம் மருத்துவரை அணுகினால் அவர் இது அல்சர் சம்பந்தமான வழி அல்லது Gastractiv என்று சொல்லி நமக்கு மருந்துகளை கொடுப்பார் என்று இந்த பதிவில் அல்சர் வரும் போது நாம் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக பார்க்க போகின்றோம்.
அல்சர் எதனால் ஏற்படுகிறது:
3. இஞ்சி பூண்டு விழுது, புளித்த தயிர், புளிப்பு அதிகமாகச் சேர்த்தால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இதனால் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல், நெஞ்சடைப்பு, புளி ஏப்பம், படபடப்பு ஏற்படுகிறது.
அல்சர் ஏற்படும் போது சாப்பிட வேண்டிய உணவு:
1. முதலில் நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும்.
2. காரம் புளி மசாலா இதுபோன்ற ஐட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.
3. பால் சாதம், பருப்பு சாதம், இட்லி சர்க்கரை, புளிப்பில்லாத தயிர் இது போன்ற உணவுகளை அல்சர் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து மூன்று மாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும மற்றும் காரம் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட வேண்டும்.
4. பாதாம் பிசின் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அதாவது இரவில் பாதாம் பிசினை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறி அல்சர் குறையும்.
5. கொப்பரைத் தேங்காய் தினமும் ஒன்றிலிருந்து மூன்று பீஸ் சாப்பிட வேண்டும், இதனால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறும், அந்த என்ன பச பசப்பு பட்டு சீக்கிரமாக குணமாகும்.
7. நேரம் தவறாமல் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வந்தாலே பொதுவாக அல்சர் என்று சொல்லப்படுகின்ற விஷயம் யாருக்கும் வராது, நேரத்திற்கு சாப்பிடாதவர்களுக்கு நிச்சயமாக அல்சர் வரும் அதுமட்டுமல்லாமல் யாரெல்லாம் காரம் மசாலா அதிகமாக சேர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்சர் வரும்.
8. மாமிச வகைகள் சேர்த்துக் கொள்ளும்போது மசாலா சேர்த்துக் கொள்ளாமல் மஞ்சள்தூள் எண்ணெய் உப்பு இது மூன்றையும் சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.
9. டென்ஷன் அதிகமாக கூடியவர்களுக்கு வயிற்றில் அதிகமாக சுரக்கும் இதனால் அவர்களுக்கு வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு டென்ஷன் ஆகும்போது ஏற்படுகிறது அதனால் டென்ஷனை குறைத்துக் கொள்ள வேண்டும்.
10. இரவு நேரத்தில் சாதத்தை ஊற வைத்துவிட்டு அதிகாலையில் கரைத்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறும் இது நம்முடைய பாட்டி வைத்தியம். அதுமட்டுமல்லாமல் தயிர் புளிப்பில்லாத சாதத்தில் கரைத்து குடிக்கலாம் மோர் புலிப்பில்லாமல் சாதத்தில் கரைத்து குடிக்கலாம் இதனால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் ஆறும்.