வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை தணிக்க இதை குடித்தால் போதுமானது. உஷ்ணத்தால் எந்த விதமான பாதிப்பும் உங்கள் உடலுக்கு ஏற்படாமல் உங்களால் பாதுகாக்க முடியும்:-
வெயில் காலம் என்றாலே நம் உடல் அதிகமாக உஷ்ணமாகிவிடும் அதனால் நமக்கு வயிற்று வலி, தலைவலி அல்லது உடலெல்லாம் நமிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும், அப்படி ஏற்படக்கூடிய ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்து நம்முடைய உடல் உஷ்ணத்தை எப்படி குறைப்பது என்பதை பற்றி எளிதாக இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்..
வாரத்திற்கு மூன்று முறை அல்லது டீக்கு பதிலாக இந்த பானத்தை நீங்கள் அருந்தினால் உங்கள் உடல் உஷ்ணம் குறையும். உங்கள் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கும் அதனால் தினமும் அருந்தினாலும் பரவாயில்லை, ஒருவேளை தினமும் குடித்தால் எனக்கு வயிற்று வலி ஏற்படும் அல்லது வயிறு எரிச்சல் ஏற்படும் என்று சொல்லக்கூடியவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதுமானது.
ஒவ்வொருவருடைய வீட்டிலும் தனியா இருக்கும் அந்த தனியாவை ஒன்றிரண்டாக பொடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சுத்தமான பசுபாலில் பனைவெல்லத்தை சேர்த்து அருந்தினால் நாவரட்சி நீங்கும் உடல் அலுப்பு குறையும். டீக்கு பதிலாக இந்த பானத்தை அருந்துவதால் உடல் உஷ்ணம் தனியும்.
தனியாவை ஓர் இரண்டு எடுத்துக்கொண்டு நன்கு அதை புடைக்க வேண்டும். தேவையான அளவு அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு டீ குடிக்கும் அளவிற்கு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இந்த தனியாவை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த அந்த தண்ணீரை பாலோடு கலந்து அதாவது கொதிக்க வைத்த பாலோடு கலந்து பனைவெல்லத்தை போட்டு காலையில் டீக்கு பதிலாக இந்த பானத்தை குடித்து வர வேண்டும். அப்படி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற எந்தவித பாதிப்பாக இருந்தாலும் குறையும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம், ஆண் பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இதை அருந்தலாம் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது. ஆனால் நீங்கள் எத்தனை பேர் அருந்துகின்றீர்களோ அதற்கு தகுந்தவாறு மூல பொருளை சேர்க்க வேண்டும்.
குறிப்பு:
முடிந்தவரை இயற்கையான முறையில் தனியாவையும் நாட்டு வெள்ளத்தையும் அல்லது பணவெல்லத்தையும் சேர்க்க வேண்டுமே தவிர நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பவுடரை வாங்கி வந்து நீங்கள் உண்பதால் எந்த விதமான பயனும் கிடைக்கப்போவதில்லை. இயற்கையான முறையில் ஏற்படுகின்ற நன்மைகளை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய மருந்துக்கு பவர் கம்மி முடிந்தவரை இயற்கையான பொருளை வைத்து உங்கள் உடலை பாதுகாக்க வேண்டும், அது உங்களுக்கு நல்லது.
Post Views: 83
Related