எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னும் விநாயகரை வழிபாடு செய்து விட்டு காரியத்தை செய் சகல நன்மைகளும் உன்னை தேடி வரும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதனால்தான் திருமணம் ஆகும்போது கூட முதல் பத்திரிக்கை குலதெய்வத்திற்கு வைத்து பிறகு விநாயகரை வணங்கிய பிறகு அடைந்திருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்கள் அந்த வகையில் விநாயகரை வழிபாடு செய்வது எதற்காக என்பதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் நாம் பார்க்கலம்.
எந்த காரியத்தை தொடங்கப் போகின்ற போதும் விநாயகரை வணங்கி செயல்பட்டால் எந்த தடங்கலும் இன்றி காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை அதன் காரணமாக நாடு முழுவதும் விநாயகரை வழிபாட்டிற்கு முன்னுரிமையை முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள்.
எதற்காக விநாயகருக்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள் என்றால் சகல சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவர் விநாயகர் அதாவது இன்று கடவுளுக்கு படைக்கக்கூடிய அத்தனை பரிகார முறைகளும் வணங்கக்கூடிய வழிபாட்டு முறைகளுக்கும் மூத்த கடவுள் யார் என்று பார்த்தால் விநாயக பெருமான் தான் அதனால் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கரைத்து குடித்தவர் விநாயக பெருமான் என்பதால் அவரை முதலில் வழிபட்டு பிறகு அனைவரையும் வணங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது.




















