பூராடம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் :-
பூராடம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பூராடம் நட்சத்திரம் என்று சொன்னாலே கோவங்கள் அதிகமாக வந்தாலும் அதே அளவு அன்புகளும் நிறைந்த நட்சத்திரமாக அது பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நமக்கு எதற்கு வம்பு என்று விளங்கிப் போகக்கூடிய மனநிலையை கொண்டவர்களாகவும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் முன்னேற்றங்கள் கிடைக்க வேண்டும் என்றால் உங்களுக்கே உண்டான கடவுளை நீங்கள் வணங்கினால் மட்டுமே உங்களுக்கு சிறப்பு கிடைக்கும் ல். அந்த வகையில் பூராடம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பதை தான் பார்க்க போகின்றது.
பூராடம் நட்சத்திரம்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சிவபெருமானை வணங்க வேண்டும். குறிப்பாக திங்கட்கிழமை அன்று சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு சிறப்புகளை தரும் அது மட்டுமல்லாமல் தினம்தோறும் சிவன் பாடலையும் சிவன் நாமத்தையும் நீங்கள் உங்கள் காதுகளில் கேட்கவோ உங்கள் வாய்களில் சொல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் எந்த ஒரு முக்கியமான காரியங்கள் செய்தாலும் அப்போது சிவபெருமானிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் உங்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். கண்டிப்பாக பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமான் வழிபாடு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடிய வழிபாடாக அமையும்.