நீண்ட நாட்களாக அடிபட்ட புண் ஆறாமல் இருந்தால் எளிமையாக வீட்டு மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்தலாம் / A simple home remedy if the sore is not healed for a long time:-
நீண்ட நாட்கள் ஆறாத புண் ஏதாவது உங்கள் உடலில் இருந்தா அதை நாம் எப்படி எளிமையான வீட்டு மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்துவது என்பதை பற்றி தான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். அதற்கு முன்னாடி முதலில் ஆறாத புண் இருந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அந்த புண் சாதாரண புண் தானா அல்லது புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பா என்பதை பற்றி தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது சாதாரண புண்ணாக இருந்தால் இந்த வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தி எளிய முறையில் உங்களுடைய ஆறாத புண்ணை குணப்படுத்திக் கொள்ளலாம். அதனால் முதலில் நீங்கள் ஆறாத புண் ஏதாவது இருந்தால் அது வெறும் புண் தானா என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா, உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். Blood Sugar இல்லை அதாவது உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது சர்க்கரை நோய் எனக்கு இல்லை என்று தெரிந்த பிறகு இதை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் எந்தவித பக்க விளைவு இல்லாமல் எளிமையான முறையில் வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே ஆறாத அடிபட்ட புண் ஆற வீட்டு மருந்து.
மூலப் பொருள்:-
செய்முறை விளக்கம்:-
அகத்தி இலை உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமங்களிலோ அல்லது செடி கொடிகள் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் அகத்தி இலை கிடைக்கும். இந்த அகத்திக்கீரை என்று சொல்லக்கூடிய அகத்திய இலையை எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து அந்த இலையை உங்கள் ஆறாத அடிப்பட்ட புண்மீது வைத்து ஒரு சுத்தமான பருத்தி துணியாள் சுத்தி வர வேண்டும். தினம்தோறும் இப்படி ட்ரெஸ்ஸிங் செய்து வந்தால் நிச்சயமாக ஆறாத புண்கூட ஆறும்.
குறிப்பு:-