நாட்டுமருந்து பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகம் இன்று பல பேருக்கும் இருந்து கொண்டிருக்கிறது இந்த நவீன காலத்தில் அதிகளவு ஆங்கிலம் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக பல வகையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது, என்ற ஒரு பயமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் ஒரு சில வியாதிகளுக்கு ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது என்பதையும் நிரூபிக்கின்றது அந்த வகையில் நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற ஒரு சந்தேகங்களுக்கான பிடியை தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.
நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாமா.? வேண்டாமா.?
நாட்டு மருந்து எடுத்துக் கொள்வது என்பது மிகவும் சிறந்தது ஏனென்றால் நாட்டு மருந்தில் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது அதனால் தாராளமாக நாட்டு மருந்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்களே உங்களுக்கு தெரிந்த வைத்தியத்தை பயன்படுத்தக் கூடாது அதற்கென்று படித்த சித்தா மருத்துவரை அணுகி அவர்கள் கொடுக்கக்கூடிய அந்த நாட்டு மருந்தை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உங்கள் உடலில் கிடைக்கும். அதனால் ஒரு சித்தா மருத்துவரை அணுகி அவர்கள் கொடுக்கக்கூடிய மருந்தை நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றங்கள் கிடைக்கும் எந்த விதமான பக்க விளைவும் இல்லாமல்.
எப்போதும் நாட்டு மருந்து நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அது 48 நாட்கள் ஆகும் உங்கள் உடலில் ஊறி உங்களுக்கு வேலை செய்வதற்கு பொதுவாக நாட்டு மருத்துவம் என்றாலே உடல் ரீதியாக முற்றிலுமாக குணப்படுத்தும் தன்மை கொண்டது. ஆங்கில மருத்துவம் உடனடியாக குணப்படுத்தும் ஆனால் திரும்ப வருவதற்கு உடனடியாக வந்துவிடும் ஆனால் நாட்டு மருத்துவம் மெதுவாக குணப்படுத்தும் திரும்ப வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடிய தன்மை கொண்டது ஒரு சில மருந்துகள் திரும்ப வராமல் உங்கள் உடம்பில் இம்முனாட்டிப்பவரை அதிகரிக்க உதவுகிறது அதனால் நீங்கள் தாராளமாக நாட்டு மருந்தை எடுத்துக் கொள்ளலாம் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படுவது கிடையாது மிக மிகக் குறைவு நாட்டு மருந்தை எடுத்துக் கொண்டு பக்க விளைவு வந்தவர்கள் ஆனால் முறையாக நீங்கள் சித்தா மருத்துவரை அணுக எடுத்துக் கொள்வது என்பது சிறப்பானது.