தொப்பையை எளிமையான முறையில் குறைக்க முடியும் மற்றும் உணவில் இருக்கக்கூடிய கொழுப்புகளை நம் உடலுக்கு சேராமல் எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்
தொப்பையை எளிமையான முறையில் குறைக்க முடியும் மற்றும் உணவில் இருக்கக்கூடிய கொழுப்பு அளவை கட்டுப்படுத்தி நம் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் நம்மால் பாதுகாக்க முடியும் அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் பொதுவாக முந்தைய காலகட்டங்களில் நாம் உணவு உண்ட பிறகு ஏதாவது ஒரு வேலை செய்வோம் அல்லது ஒரு அரை மணி நேரம் நடைப்பயிற்சியாக செய்து பிறகு நாம் ஒரு இடத்தில் அமர்ந்து உட்காரக்கூடிய பழக்கம் இருந்தது குறிப்பாக சிறுவயதில் நாம் சாப்பிட்ட உடன் அப்படியே அமரும் பழக்கமல்ல அல்லது உறங்கும் பழக்கம் கிடையாது நாம் சாப்பிட்ட உடன் நம் சிறு வயது நண்பர்களோடு வெளியில் விளையாட சென்று விடுவோம் அதனால் நமக்கு தொப்பையின் அளவு பெரிதாகாமல் சீராக இருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒன்று உணவு உண்ட பிறகு உடனடியாக படுத்து உறங்குவது அல்லது உணவு உண்ட பிறகு நாம் வேலை செய்யும் இடங்களில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பது இதனால் எந்த விதமான உழைப்பும் நம் வயிற்றுக்கு கொடுக்காத காரணத்தினால் தொப்பை வருவதற்கு மிக முக்கிய காரணமாக இதை பார்க்கப்படுகிறது சரி எப்படி தொப்பையை குறைப்பது எளிமையான வீட்டு வைத்திய முறையில் நம்முடைய தொப்பையை குறைக்க முடியும் மற்றும் நாம் சாப்பிட்ட பிறகு சாப்பாட்டில் இருக்கக்கூடிய கொழுப்பு சத்தை குறைக்க முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
தொப்பையை குறைக்க வீட்டு மருத்துவ முறை Thoppai Kuraiya enna seiyavendum.? Thoppai Kuraiya iravuneram unavu :-
சீரகம் 50 கிராம் மற்றும் வெந்தயம் 50 கிராம் மற்றும் ஓமம் 30 கிராம் இந்த அளவில் மூன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு கடாயில் போட்டு வறுத்து விட்டு அது ஆரிய பின்பு உங்களுடைய மிக்ஸியில் போட்டு நன்கு பவுடராகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்துக் கொண்ட அந்த பவுடரை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும் இதை தினமும் இரவு சாப்பிட்ட பிறகு உறங்க செல்வதற்கு முன் ஒரு அரை டீஸ்பூன் அந்த பவுடரை ஒரு கிளாஸில் போட்டு சுடு தண்ணியை ஊற்றி கலக்கி குடிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் காலம் செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்.
சில பேருக்கு இது வயிறு எரிச்சலை கொடுக்கும் அவர்கள் மோர் அல்லது காரங்களை குறைத்துக் கொள்வது சிறப்பு.
இது எளிமையான வீட்டு முறையில் நாம் நம்முடைய தொப்பையை குறைப்பதற்கான ஒரு வழிகள் இது பலபேர் செய்து இருக்கிறார்கள் தொப்பை மட்டும் அல்ல உடல் எடையும் இதனால் குறைக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் இது எந்த விதமான பக்க விளைவும் அல்ல எப்போது நீங்கள் இதை நிறுத்த வேண்டும் என்றால் உங்களுடைய உள்ளங்கை அல்லது உள்ளங்கால் ஒருவகையான எரிச்சல் உணர்வு ஏற்படும் அப்போது உங்கள் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிட்டது உங்கள் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து விட்டது இதற்கு மேல் இந்த பவுடர் உங்களுக்கு தேவைபடாது என்று உங்கள் உடல் உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் அப்போது நீங்கள் இதை நிறுத்தி விடலாம்.




















