தீராத வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய நன்கு பசி எடுக்கக்கூடிய, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வில்வ இலை சாறு உதவுகிறது / Ulcer treatment in Nattu maruthuvam
சிவன் கோவிலுக்கு போனால் வில்வ இலையால் அபிஷேகம் செய்வார்கள் அங்கு இருக்கக்கூடிய பல கடவுள்களுக்கு வில்வ இலையை சாத்துவதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு நடக்கும் என்று பல பேர் சொல்லி இருப்பார்கள், இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் வில்வ இலை சாறு நமக்கு என்னென்ன நன்மைகளைக் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி தான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். இவ்வளவு பயன்கள் நமக்கு தருகிறதா இந்த வில்வ இலை என்று நம்மையே ஆச்சரியப்படச் செய்யும் அளவிற்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டதுதான் இந்த வில்வ இலை. சோ, இதனுடைய மகத்துவத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதனால் தான் சிவன் கோவில்களில் சிவனுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்ய வேண்டும். அவருக்கு பிடித்த ஒரு இலை என்ற ஒரு உன்னதமான கூற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
மூலப் பொருள்:
வில்வ இலைச்சாறு
செய்முறை:
உங்கள் ஊர்களில் அல்லது கிராமப்புறங்களில் வில்வ இலை நிச்சயமாக கிடைக்கும் இந்த வில்வ இலையை கொண்டு வந்து அம்மியில் போட்டு நன்கு அரைத்து ஒரு துணியில் அதை வடிகட்டுவதன் மூலமாக அதனுடைய சாறு நமக்கு கிடைக்கும். அந்த சாற்றை நாம் குடிப்பதன் மூலமாக வயிற்றுப் புண்கள் ஆறாமல் இருந்தால் ஆறும், நன்றாக பசி எடுக்கும், காய்ச்சலை குறைக்க உதவுகிறது, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது, இப்படி பல வகையில் அது நமக்கு நன்மைகளை தருகிறது. ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் என்னால் அம்மியில் போட்டு வில்வ இலையை அரைத்து அந்த சாற்றை குடிக்க முடியாது என்று சொல்லக்கூடியவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் வில்வ இலை சாறு என்று கேட்டால் அவர்கள் டானிக் வடிவில் உங்களுக்கு கொடுப்பார்கள் அதை காலையில் ஒரு டீஸ்பூன் இரவு ஒரு டீஸ்பூன் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஆறாத வயிற்றுப்புண். ஆறும்
குறிப்பு: