கடவுள்களில் முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் அவரைப் பற்றிதான் இன்று நாம் பார்க்க போகிறோம
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கோவில்களிலும் விநாயகருக்கு என்று சிலை நிச்சயமாக இருக்கும் அந்த வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருக்கக்கூடிய இடுக்குப் பிள்ளையார் கோவிலின் வரலாற்றை இன்று இந்த பதிவில் நாம் முழுமையாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்
அந்தக் காலத்தில் சித்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவில் இருக்கக்கூடிய அடிப்பகுதியில் மூலமந்திரத்தை புதைத்து வைத்ததாக ஒரு வரலாறு சொல்லப்பட்டு வருகின்றன. இந்த இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்கு மூன்று பாதைகள் உள்ளன முதல் பாதை பெரியதாகவும் நடுவில் இருக்கக்கூடிய பாதை சிறியதாகவும் மீண்டும் வெளிவரும் பாதை பெரியதாகவும் மூன்று வடிவில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன
யாரெல்லாம் அதிக பாவம் செய்து இருக்கின்றார்களோ அவர்களுக்கு அந்த இடுக்கு பிள்ளையார் வழி விடுவதில்லை என்ற ஒரு வரலாறும் உண்டு
இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து வரக்கூடிய அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை ஏராளம். அதில் குறிப்பாக குழந்தை வரம் நோய் தீர்ப்பது குழந்தை பாக்கியம் திருமணபாக்கியம் இப்படி எண்ணற்ற பாக்கியங்களை இடுக்குப் பிள்ளையார் அருள் பாலித்து வருகின்றார் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டு வரும் உண்மை
இன்றும் சித்தர்கள் இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து வெளிவருவதாக பலரும் சொல்லப்பட்டு வரும் உண்மையாக பார்க்கப்படுகிறது





















