சாய்பாபா இன்று நமக்கு சொல்லும் உண்மை / சாய்பாபா பொன்மொழிகள் / Shirdi Sai Baba advice in Tamil :-
சாய் பக்தர்களுக்கு வணக்கம். தினமும் சாயப்பா பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று நாம் பார்க்கக் கூடியது. சாய் அப்பா நமக்கு சொல்லக்கூடிய உண்மை.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கடந்த காலத்தை பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் அல்லது நிகழ்காலத்தை நினைக்காமல் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும் இதை தான் அதிகப்பேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றால் நீங்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டே ஆக வேண்டும் எதிர்காலத்தையும் மறந்து விட வேண்டும் இறந்த காலத்தையும் மறந்து விட வேண்டும் நிகழ்காலத்தில் உங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும்.
நிகழ்காலத்தில் உங்களை சுற்றி பல சந்தோஷங்கள் மறைந்து இருக்கின்றன அந்த சந்தோஷங்களை எல்லாம் நீங்கள் அனுபவிக்காமல் கவலையில் இருந்தால் என்ன பலன் சற்று உன்னிப்பாக கவனியுங்கள் உங்களை சுற்றி ஆயிரம் சந்தோஷங்களை சாய் அப்பா ஒழித்து வைத்திருக்கிறார் அதை நீங்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் அதற்கு நிஜமான உண்மையை ஏற்றுக்கொண்டு நிஜ வாழ்க்கையை வாழ வேண்டும்.
ஓம் சாய் ராம்..