சாயிபாபாவின் பக்தரான ராம்கீர்புவா என்பவர், சாய்பாபா ஷீரடிக்கு இரண்டாவது முறை வந்ததை பற்றிக் கூறுகிறார் / சாய்பாபா உண்மை கதை ;-
பாபா முதன் முறை ஷீரடி வந்தபோது நான் மாணவனாக இருந்தேன். அப்போது அவரோடு தூப்கேடாவைச் சேர்ந்த படேல் என்பவரும் வந்தார். இவர் ஷீரடியைச் சேர்ந்த ஆமின் பாயின் மகனான
ஹமீதுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்வதற்காக வந்தார். அப்போது பாபா25 அல்லது வையதுடையவராகத் தோற்றம் அளித்தார். அவர் ஆமில்பாபின் விருந்தினராகத் தங்கினார். பாபா வந்த புதிதில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு அதன் மேல் காவிக்கலர் தொப்பியும் அணிந்திருந்தார். அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய். தீப்பெட்டி ஆகிய வற்றையும் வைத்திருந்தார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்”
ஷீரடிக்கு வந்த நாவைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியையும், வெண்மையான தலை உடைகளையும் அணியத் தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.