கண் அலர்ஜியை போக்குவதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை | Simple Home Remedy to Relieve Eye Allergy.! / Kan Allergy Treatment in Tamil :-
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் மற்றும் சமூக வலைத்தளம், டெலிவிஷன், கணினி, இதை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் அலர்ஜி ஏற்பட்டு கண் எரிச்சல், கண் வீக்கம், கண்களில் தண்ணீர், வந்து கொண்டிருப்பது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பதிவில் எளிமையாக கண் அலர்ஜியை எப்படி குறைப்பது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

மூலப்பொருள்:-
புளியம்பூ கண்களில் ஏற்படும் அலர்ஜியை விரட்டும் இந்த புளியம்பூவின் கஷாயம் தொண்டை அழற்சிக்கும் பயன்படுகிறது அது மட்டுமல்லாமல் புளியம்பூ சிறப்பு ரத்த மூலத்திற்கு சிறந்தது இதை நீங்கள் பயன்படுத்துவது மூலமாக உங்களுடைய கண்ணை பாதுகாக்க முடியும்.
செய்முறை விளக்கம்:-
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்க கூடிய புளிய மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புளியம் பூவை எடுத்துக்கொண்டு. அதை கசாயம் வடிவில் வைத்து குடித்தால் கண்களுக்கு நல்லது கண் அலர்ஜி குறையும் அது மட்டும் அல்லாமல் இரத்த மூலம் வராமல் தடுப்பதற்கு, இது உதவுகிறது. சிலபேர் இந்த புளிய மரத்தில் இருக்கக்கூடிய பூவை பறிக்க முடியவில்லை அல்லது கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் உங்கள் வீட்டு கருகாமல் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் போய் புளியம்பூ டானிக் என்று கேட்டால் அவர்கள் கொடுப்பார்கள் அதை நீங்கள் காலை மற்றும் இரவு நேரம் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று விகிதத்தில் ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டாலே போதுமானது. எந்தவித கண்ண அலர்ஜியாக இருந்தாலும் அறவே நிவர்த்தியாகும்.
குறிப்பு:-
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை பயன்படுத்தலாம் எந்தவித பக்க விளைவும் கிடையாது முடிந்தவரை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய புளிய மரத்தில் தொங்கி கொண்டிருக்கக்கூடிய புளியம்பூவை வைத்து கசாயம் ரெடி பண்ணி குடிக்க வேண்டும். முடிந்தவரை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருளை தவிர்த்து விட்டு இயற்கையான முறையை பயன்படுத்தி தொடங்கிக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.