கடுமையான பல் வலியை போக்கக்கூடிய கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் மஞ்சள் / Traditional medicine for severe toothache in tamil

கடுமையான பல் வலியை போக்கக்கூடிய கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் மஞ்சள் / Traditional medicine for severe toothache in tamil

எல்லாருக்கும் வணக்கம் இருப்பதிலேயே ரொம்ப வலி என்று நம் உடலில் இருக்கக்கூடிய பாகங்களை சொல்லும்போது அதில் குறிப்பாக பல் வலியை சொல்லலாம் ஒருவருக்கு தலைவலி வயிற்று வலி, பல் வலி வந்தால் தான் அவர்களால் உணர முடியும் என்ற ஒரு வார்த்தையை நாம் நம் முன்னோர்களோ அல்லது நம் நண்பர்களோ சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் ஒருவருக்கு பல் வலி வந்தால், அல்லது வராமல் இருப்பதற்கு ஆரோக்கியமான ஒரு வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

இது அன்றாட நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் அப்படி இல்லை என்றால் நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் பொருள் அல்லது கிராமப்புறங்களில் நாம் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை வைத்து நாம் எப்படி நம் பல் வலியை சமாளிப்பது, வராமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி தெளிவாக பார்க்கப் போகின்றோம்.

மூலப்பொருள்:

மஞ்சள் மற்றும் கரிசலாங்கண்ணி இலை

இந்த மஞ்சள் மற்றும் கரிசலாங்கண்ணி இலை நமக்கு எப்படி உதவுகிறது எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு மெல்ல வேண்டும் அப்படி வெல்லும் போது அதில் இருந்து வரக்கூடிய சாறு நம் பள்ளியில் இருக்கக்கூடிய ஈறுகளின் வழியாக பாய்ந்து நம்முடைய வழியை குணப்படுத்தும். அது மட்டுமல்லாமல் அதிலேயே நாம் பல் துவக்கும் போது பற்களில் படிந்திருக்கும் கரைகளும் நீங்கும் பற்கள் முத்துப்போல பிரகாசிக்கும்.

செய்முறை விளக்கம்:

மஞ்சள் மற்றும் கரிசலாங்கண்ணி இலை இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அப்படி இல்லை என்றால் கிராமப்புறங்களில் எளிதாக இந்த கரிசலாங்கண்ணி இலை கிடைக்கிறது. நீங்கள் மஞ்சள் மட்டும் வாங்கிக் கொண்டால் போதுமானது ஒரு சில கிராமப்புறங்களில் மஞ்சளும் சேர்த்து விளைவிக்கின்றார்கள் என்றால் அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இரண்டையும் நம் பல் துவக்குவதற்கு தேவையான சிறு சிறு துளியாக எடுத்துக்கொண்டு நம் பல்லை நன்கு அதில் தேய்ப்பதன் மூலமாக பற்கள் பளபளப்பாகவும் பற்களில் இருக்கக்கூடிய கறைகளும் நீங்கும்.

இது அதிக அளவு செலவுகள் கிடையாது மிகக் குறைந்த விலையில் நம் பல்வலியை போக்குவதும் பல்வலி வராமல் தடுப்பதற்கும் இது உதவுகிறது இதை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு பயன் தரும்

குறிப்பு:

கெமிக்கல் கலந்த மஞ்சள் பவுடர் கரிசலாங்கண்ணி இலைச்சாறு இப்படி வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் நமக்கு கிடைக்க கூடிய கரிசலாங்கண்ணி இலை மற்றும் மஞ்சள் இரண்டையும் நசுக்கி அதிலிருந்து வரக்கூடிய சாட்டின் வழியாக நாம் பல் தெய்ப்பதன் மூலமாக நமக்கு ஆரோக்கியமான உடலை நம்மால் பெற முடியும். முடிந்தவரை மருந்து கடைகளில் இருந்து வாங்காமல் இயற்கையான முறையில் செய்வது மிக மிக நல்லது..

ஒருவேளை நீங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றீர்கள் என்றால் அல்லது கரிசலாங்கண்ணி கீரை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எது சிறந்தது என்று தேர்வு செய்து அதை வாங்கி பயன்படுத்துங்கள் நிச்சயமாக ஒரு நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். நீங்காத பல்வலி இருந்தாலும் நீங்கும் இனி பல்வலி வராமலும் தடுக்கும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top