உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெற எளிமையான வீட்டு மருத்துவ முறை :-
உடல் சோர்வு நீங்கி உடல் வலிகள் நீங்கி புத்துணர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம். தினமும் காலையிலிருந்து மாலை வரை உழைத்துக் கொண்டிருக்கும் கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் உடல் சோர்வு நிச்சயமாக இருக்கும் அப்படி இருக்கக்கூடிய உடல் சோர்வை நீக்குவதற்கான எளிமையான வீட்டு மருத்துவ முறை.
மூலப்பொருள்
கசகசாவை வறுத்து பொடித்து பனை வெல்லத்துடன் பாலில் கலந்து இரவில் குடித்து வந்தால் காலையில் ரத்த சோகை உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் கண் விழிக்கலாம்.
விளக்கம்
கசகசாவை ஒரு மாதத்திற்கு தேவையான அளவிற்கு அரைக்கக்கூடிய அல்லது வறுத்து பொடி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டால் போதுமானது. பனைவெல்லத்தை வாங்கி இரவு தூங்கும் போது பாலில் கலந்து குடித்து வந்தால் கண்டிப்பாக அடுத்த நாள் காலையில் எழும்போது உங்களுடைய உடல் சோர்வு இருக்காது ஒரு நல்ல புத்துணர்ச்சியுடன் உங்களுடைய கண்கள் விழிக்கப்படும் எந்த விதமான பக்க விளைவும் இல்லாத எளிமையான வீட்டு மருத்துவ முறை.





















