உடல் எடையை எளிமையாக குறைத்து விட முடியும் என்பதை நம் முன்னோர்கள் மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் உடல் எடை குறைய நாட்டு மருத்துவம் என்ன சொல்கிறது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.
● என்ன செய்ய வேண்டும்.?
★ இஞ்சி சாறுடன் சம அளவில் தேன் கலந்து கலக்கி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும.
★ கொள்ளை வேகவைத்து நீரை வடிகட்டி தினமும் குடிக்க வேண்டும்.
★ வாழைத்தண்டு சாறு அருகம்புல் சாறு பூசணி சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிக்க வேண்டும்.
★ பப்பாளி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
★ எலுமிச்சம் பழச்சாற்றில் வேண்டிய அளவு தேன் கலந்து கலக்கி காலை மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
★ பாலிஷ் செய்யாத தோல் நீக்காத வயிறு வகைகளை உணவில் அதிக சேர்த்துக் கொள்வது நல்லது.
★ வெண்ணை நீக்கிய மோர் இளநீர் சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் பருகலாம்.
★ தினமும் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்க்கவும்.
★ முளைக்கட்டிய ராகியை கஞ்சி செய்து குடிக்கவும்.