உடல் எடை அதிகரிக்க எளிய வழிமுறைகள்.! இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் எடை மூன்று மாதத்தில் அதிகரிக்கும்!! Weight gain in tamil | Fast Weight gain tips | Weight gain foods

உடல் எடையை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும், எளிதில் உடல் எடையை அதிகரிக்க நாம் செய்யக்கூடிய சில விஷயங்களைப் பற்றியும் நாம் உண்ணக்கூடிய சில முக்கியமான உணவுகளை பற்றியும் தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

உடல் எடையை கூட்டுவதற்காக மருத்துவர் ரீதியாக சென்றால் அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இதனால் சிறுநிரக கோளாறு கிட்னி பாதிப்பு இதுபோன்ற நிகழ்வுகள் அதிகளவு ஏற்படுகின்றன இதனால் மருத்துவர்கள் கூட உடல் எடையை அதிகரிக்கவும் அல்லது உடல் எடையை குறைக்கவும் எந்தவிதமான மருந்துகளையும் நோயாளிகளுக்கு கொடுப்பது கிடையாது மாறாக உணவுகளின் மூலமாகத்தான் எடைகளை ஏற்றவும் முடியும் இறக்கவும் முடியும் என்ற ஒரு விஷயத்தை மருத்துவர்கள் ஆணித்தனமாக கூறி இருக்கின்றன அந்த வகையில் நாம் உண்பதன் மூலமாகவே நம்முடைய உடல் எடையையும் அதிகரிக்கலாம்.
உடல் எடையை அதிகரிக்க என்ன உணவு எடுத்துக் கொள்வது:

1. தினமும் நீங்கள் உணவு உண்ட பிறகு ஒரு இனிப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் அது எந்த விதமான இனிப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். தினமும் நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு ஒரு இனிப்பை உங்கள் உணவுக்குப் பிறகு கடைசியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இது மூன்று மாத காலம் இப்படி நடக்க வேண்டும்.

2. தினமும் மதியம் நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உறங்க வேண்டும். இப்படி உறங்குவதன் மூலமாக உங்களுடைய உடல் சீரான நிலைக்கு வந்து உங்களுடைய உணவின் செரிமானம் சீரான நிலையில் இருந்து உங்களுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் எல்லா பாகங்களுக்கும் போய் சேரும் இதனால் உடல் எடை கூடும்.

3. வாரத்திற்கு மூன்று முறை கண்டிப்பாக மாமிசத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் மட்டன் சிக்கன் மீன் இப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை என்று மாதத்திற்கு 12 முறை நீங்கள் மாமிசத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து நீங்கள் ஒரு மூன்று மாத காலம் நல்ல உணவு உண்ட பிறகு ஒரு இனிப்பு அது மட்டுமல்லாமல் மதிய நேரத்தில் உணவுக்குப் பிறகு ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கட்டாயம் உறங்க வேண்டும் இப்படி நீங்கள் செய்து வந்தால் நிச்சயமாக மூன்று மாதத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.

சரி என்னால் மதியம் உறங்க முடியாது இனிப்புகள் உண்ண முடியாது நான் என்ன செய்வது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம்;

இப்படி உணவு அதிகமாக எடுத்துக் கொள்ள முடியாது உணவுக்கு பிறகு இனிப்பு எடுத்துக் கொள்ள முடியாது மதிய வேளையில் உறங்க முடியாது இருந்தாலும் நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் ஒரே வழி தான் உள்ளது அது என்னவென்றால் உடற்பயிற்சி செய்வது. நன்றாக உடல் பயிற்சி செய்ய வேண்டும் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் கட்டாயம் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பசி நன்றாக எடுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இதனால் உங்கள் எடை அதிகரிக்கும். பார்ப்பதற்கு எடை அதிகரித்தது போல் தெரியாமல் ஒரு கட்டு மஸ்தான உடம்பு உங்களுக்கு தெரியும் பார்ப்பவர்கள் கண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை உங்கள் உடம்பு காட்டும். அதனால் தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்யுங்கள் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த உடல் எடை கூடுவது மட்டுமல்லாமல் அழகான தேகத்தையும் அது கொடுக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top