உடலை அழகாக மின்னச் செய்யக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை இலை சாறு

உடலை அழகாக மின்னச் செய்யக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை இலை சாறு / Beauty Tips in tamil

நீங்க எம்ஜிஆர் போல தகதகன்னு மின்றிங்க அப்படின்ற ஒரு வார்த்தையை நிச்சயமாக ஒவ்வொருவரும் தொலைக்காட்சிகளிலும் அல்லது சினிமாக்களிலும் கேட்டிருப்பீர்கள். ஆம் நம்முடைய உடம்பு அப்படி தகதக மின்ன வேண்டும் என்றால் இந்தக் கீரையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதுமானது. உங்கள் உடம்பு பொன் போல் மின்ன ஆரம்பித்து விடும் ஆம் நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம், அதிகளவு செலவுகள் செய்யாமல் குறைந்த அளவிலேயே செய்யக்கூடிய செலவின் மூலமாக நம்முடைய உடம்பை அழகாகவும் பொன்னிறமாகவும் பல பலப்பாகவும் மாற்றக் கூடிய ஒரு கீரையை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். ஆம் அந்த கீரை பொன்னாங்கண்ணி கீரை பொன்னாங்கண்ணி இலை சாறு.

உடல் பொன் போல் மின்ன நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பொன்னாங்கண்ணி இலை சாறு:

பொன்னாங்கண்ணி இலை சாறு:

இந்த பொன்னாங்கன்னி இலை சாற்றை குடித்தால் என்னென்ன நன்மைகள் நமக்கு நடைபெறும் என்றால் உடல் பொன் போல் ஒளிரும் என்பதுதான் உண்மை அதனால்தான் இந்த பொன்னாங்கண்ணி இலைக்கு ஒரு பெயர் வைத்தார்கள் போல் நம் முன்னோர்கள், பொன்னாம் கண் நீ என்று பெயர் சூட்டினார்கள் நம் முன்னோர்கள்.

எப்படி சாப்பிடுவது:

இந்த பொன்னாங்கண்ணி கீரையை வாங்கிக் கொண்டு வந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பொறியலாகவோ அல்லது குழம்பாகவோ வைத்து உண்டு வந்தால் நிச்சயம் உங்கள் உடம்பு பொன் போல் மேனியை பெறும். உங்களைப் பார்ப்பவர்கள் நீங்களும் எம்ஜிஆர் போல தகதகன்னு மின்றிங்க அப்படின்ற ஒரு வார்த்தையை உங்கள் மீது பயன்படுத்துவார்கள்.

வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள்:

இந்த பொன்னாங்கண்ணி கீரை உங்கள் வீட்டுக்கு அருகாமையில் கிடைத்தால் நிச்சயமதை பொறியியல் செய்து அல்லது குழம்பு வைத்து தான் சாப்பிட வேண்டும் ஒரு வேலை உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இந்த பொன்னாங்கண்ணி கீரை கிடைக்கவில்லை என்றால், தாராளமாக உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைக்கு சென்று அங்கு பொன்னாங்கண்ணி இலை சாறு வாங்கி காலையில் ஒரு டீ ஸ்பூன் மற்றும் மாலை ஒரு டீஸ்பூன் என்ற முறையில் ஒரு மாதம் குடித்து வந்தால் போதுமானது உங்களுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கண்டிப்பாக தெரியும்.

யாரெல்லாம் சாப்பிடுவது:

ஐந்து வயதில் இருக்கக்கூடியவர்கள் முதல் ஆரம்பித்து 90, 100 வயது வரை இருக்கக்கூடிய அத்தனை பேரும் இந்த கீரையை சாப்பிடலாம். ஒரு வேலை கீரை கிடைக்காதவர்கள் உங்கள் வீட்டு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைக்கு சென்று அங்கு பொன்னாங்கண்ணி கீரை இலை சாறு டானிக் வடிவில் கிடைக்கும் அதை வாங்கி நீங்கள் குடிக்கலாம் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது.

குறிப்பு:

நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாற்றை வாங்கி குடிப்பதை விட இயற்கையாக கிடைக்கக்கூடிய பொன்னாங்கண்ணி இலையை வாங்கி நீங்கள் பொறியியல் பண்ணி அல்லது குழம்பு வைத்து சாப்பிடுவதால் நேரடியாக உங்கள் உடம்புக்கு முழு சக்தியும் கிடைக்கும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top