உடலில் சர்க்கரை அளவு குறையவும், இதய நோய்கள் நீங்கவும், தலைமுடி உதிர்வதை தடுக்கவும், நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது How to Reduce hair folls treatment for tamil | How to Reduce Body Sugar level in foods | Nellikai Benefits in Tamil
நாம் சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருக்கக்கூடிய ஒரு ஆயா நெல்லிக்காய் விற்றுக் கொண்டிருப்பார். அதை நாமும் ஆசையோடு காரம் போட்டு கலந்து வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டு இருப்போம். நண்பர்களோடு இன்று நினைத்துப் பார்த்தாலும் மனமகிழ்ச்சி தரக்கூடிய தருணமாகாது அமைகின்றது ஆம் அப்படி சாப்பிட்ட நெல்லிக்காயில் நமக்கு என்ன என்ன சத்துக்கள் கிடைக்கின்றன எதுக்கெல்லாம் அது பயன்படுகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஒவ்வொருவரும் நெல்லிக்காயை சாப்பிட வேண்டும் அது பல வகையில் நமக்கு பல நன்மைகளை கொடுக்கின்றன.
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் சாறு இது எதற்கெல்லாம் நமக்கு பயன்படுகிறது.
நீரிழிவு நோய் குறையவும், இதய நோய்கள் நீங்கவும் இந்த நெல்லிக்காய் உதவுகிறது அது மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்வதை தடுப்பதிலும், உடல் பலவீனமின்றி எண்ணத்தை நமக்குள் உண்டு பண்ணினால் அதை நீக்கி வலுப்பெறச் செய்யவும் இந்த நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் சாறு நமக்கு பயன்படுகிறது பயன் தருகிறது.
நெல்லிக்காய் சாறு நம் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மாதம் சாப்பிடலாம் அதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் ஆனால் பொதுவாக நெல்லிக்காயை இயற்கையாகவே நீங்கள் சாப்பிட வேண்டும் அதுதான் உங்களுக்கு எந்த விதமான கெமிக்கலும் கலக்காத இயற்கையான சத்து பொருள் அதனால் ஒவ்வொருவரும் நெல்லிக்காயை இயற்கையான முறையில் பறித்து சாப்பிடுவது மிகவும் உகந்தது.
ஒருவேளை வெளிநாடுகளில் இருக்கக்கூடியவர்கள் அல்லது வெளி மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் இங்கு நெல்லிக்காய் கிடைப்பது குறைவு என்று சொல்லக்கூடியவர்கள் மட்டும் நெல்லிக்காய் சாறு நல்ல பிரபலமான கம்பெனிகள் தயாரிக்க கூடிய அந்த டானிக்கை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம் தேவையில்லாத போலியான தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க கூடிய நெல்லிக்காய் சாறை வாங்கி குடிக்க வேண்டாம். அதில் நிறைய கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கும் அதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படலாம் முடிந்தவரை இயற்கையான முறையில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள் கிடைக்காத பட்சத்தில் நல்ல தகுதியான கம்பெனிகள் விற்கக்கூடிய நெல்லிக்காய் சாறு வாங்கி காலை மாலை என்று ஒரு 15 நாள் அல்லது ஒரு மாதம் சாப்பிட்டால் போதுமானது.
சிறுபிள்ளை அதாவது இரண்டு வயதிலிருந்து இறக்கும் வரை இருக்கக்கூடிய அத்தனை பேரும் இந்த நெல்லிக்காயை சாப்பிடலாம் இதை உண்பதன் மூலமாக எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது. எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு கனி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது ஒரு அரு மருந்தாக அமைகின்றது அதனால் நெல்லிக்கனியை இயற்கையான முறையில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள்.
Post Views: 67
Related