உங்கள் ராசிக்கு எந்த சிவலிங்கத்தை நீங்கள் வழிபட வேண்டும்.?
சிவன் உருவம் மற்றவர் சிவன் அன்பின் பெயர் கொண்டவர் அந்த வகையில் சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது நம்முடைய பிறவி கடனை நாம் அடைப்பதற்கு சமம் அந்த வகையில் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு ராசி இருக்கும் உங்கள் ராசிக்கு ஏற்ப ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த சிவலிங்கத்தை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் மேன்மைகள் அடைவீர்கள்.
திருவண்ணாமலை கிரிவலம் வரக்கூடிய ஒவ்வொருவரும் உங்கள் ராசிக்கு உண்டான சிவலிங்கத்தை ஒரு முறையாவது நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் நீங்கள் கிரிவலம் வரும்போது எந்த சிவலிங்கத்தை நீங்கள் வழிபாடு செய்கின்றீர்களோ இல்லையோ உங்கள் ராசிக்கு உண்டான சிவலிங்கத்தினுடைய உருவத்தை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு மகத்துவமான உண்மை.
இந்த பதிவில் திருவண்ணாமலை கிரிவலம் வரக்கூடியவர்களும் சரி அல்லது உங்கள் ஊரில் உங்கள் ராசிக்கு உண்டான சிவலிங்கத்தின் உடைய கோவில் இருந்தாலும் சரி அங்கு நீங்கள் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடி வந்து எதிர்பாராத மாற்றங்களை கொடுத்த அருள்வார்.
எந்த ராசிக்காரர்களுக்கு எந்த லிங்கம் சிறந்தது / எந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த லிங்கத்தை வழிபட வேண்டும்
■ இந்திர லிங்கம் ரிஷபம் மற்றும் துலாம்
■ அக்னி லிங்கம் – சிம்மம்
■ எம லிங்கம் – விருச்சிகம்
■ நிருதி லிங்கம் – மேஷம்
■ வருண லிங்கம் – மகரம் மற்றும்
கும்பம்
■ வாயு லிங்கம் கடகம்
■ குபேர லிங்கம் – தனுசு மற்றும் மீனம்