உங்கள் உடலில் இருந்து வெளிவரக்கூடிய வியர்வை நாற்றம் போக எளிமையான முறையில் வீட்டு வைத்தியத்தை பார்க்க போகின்றோம்

உங்கள் உடலில் இருந்து வெளிவரக்கூடிய வியர்வை நாற்றம் போக எளிமையான முறையில் வீட்டு வைத்தியத்தை பார்க்க போகின்றோம்:-

இந்த பதிவு மிக முக்கியமான ஒரு பதிவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொது இடங்களில் அனுபவிக்க கூடிய மிக இன்னல்களை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் உடலில் வியர்வை நாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக ஒரு கூச்சம் ஏற்படும், நாமே மற்றவர்களை சொல்லி இருப்போம் அவர்கள் மீது வியர்வை நாற்றம் அடிக்கிறது என்று. அந்த வியர்வை நாற்றம் நம் மீது ஏற்படும் போது மற்றவர்கள் நம்மை அப்படித்தான் சொல்வார்கள். ஆம் இந்த பதிவில் வியர்வை நாற்றம் போக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம். இதை நீங்கள் குளிக்கும் போது குளிக்க கூடிய தண்ணீரில் கலந்தால் போதுமானது அன்று முழுவதும் உங்கள் மீது இருந்து வியர்வை நாற்றம் வரவே வராது.

மூலப்பொருள்:

வெயில் என்றாலே வியர்வை அதிகமாக சுரக்கும் அதை கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்றால். குளிக்கும் நீரில் பூ கற்பூரத்தை (நாட்டு மருந்து கடைகளில்) இந்த கற்பூரம் கிடைக்கும். அந்த கருப்புரத்தை தண்ணீரில் போட்டு கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் போய்விடும்.

செய்முறை விளக்கம்:

பூ கற்பூரம் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகிறது. நீங்கள் குளிக்க கூடிய பச்சை தண்ணியாக இருந்தாலும் சரி சுடுதண்ணியாக இருந்தாலும் சரி அதில் சிறிதளவு போட்டு கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொண்ட தண்ணீரை நீங்கள் உடலின் மேல் ஊற்ற வேண்டும் தலைக்கு ஊத்திக் கொள்ளக்கூடாது. உடலுக்கு ஊற்றிக் கொள்ளும் போது உங்கள் மீது இருந்து வியர்வை நாற்றம் வெளியில் வராது இது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு விஷயம் இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் வேண்டாம். பூங்கற்புறம் என்பது எந்த விதமான தீங்கையும் நம் உடலுக்கு செய்யாது. நாம் கோவில்களில் குறிப்பாக பெருமாள் கோவில்களில் கடவுளை வணங்கிய பிறகு நமக்கு கொடுக்கக்கூடிய திருத்தத்தில் கலக்கக் கூடிய பூங்கற்பூரம். அதனால் நமக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது தாராளமாக நீங்கள் கலந்து குளிக்கலாம்..

குறிப்பு:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வியர்வை நாற்றம் என்றாலே ஒரு கூச்சம் இருக்கும், அப்படி தன் உடம்பின் மீது வியர்வை நாற்றம் வருகிறது என்று நீங்கள் அறிந்த பிறகு இதை பயன்படுத்துங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல விதமான ரிசல்ட்டை கொடுக்கும். இதனால் எந்த விதமான பக்க விளைவும் அல்ல தாராளமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம் ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என்று அத்தனை பேரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top