இயற்கையான முறையில் தலைக்கு ஷாம்பு தயாரிப்பது எப்படி.!

இயற்கையான முறையில் தலைக்கு ஷாம்பு தயாரிப்பது எப்படி.!

இயற்கையான முறையில் ஷாம்பு தலைக்கு தயாரிப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். நான் கடைகளில் வைக்கக்கூடிய ஷாம்பு பயன்படுத்துவதன் மூலமாக எனக்கு முடிகள் கொட்டுகிறது அதனால் நான் இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து அதை நான் பயன்படுத்த விரும்புகிறேன் என்று சொல்லக்கூடிய அத்தனை பேருக்குமே இது பயன்பெற பயன் தரக்கூடிய பதிவு. வாருங்கள் எப்படி இயற்கை முறையில் ஷாம்பூ தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

மூலப்பொருள்

ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சை பயிறு அரைப்பங்கு, பொங்க காய் ஒரு கைப்பிடி இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும் முடி வளர உதவும் ரசாயன கலப்பில்லாத பக்க விளைவுகள் இல்லாத இயற்கை ஷாம்பு இது.

விளக்கம்

ரசாயனம் கலக்காத ஷாம்பூ எனக்கு வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் கண்டிப்பாக இந்த முறையை பயன்படுத்தி இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரித்து நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக கண்டிப்பாக எந்தவித அலர்ஜி பக்கவிளைவு வராது அது மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். நம் முன்னோர்கள் அதிக அளவு பயன்படுத்திய இயற்கை ஷாம்பூ இதுதான் இன்று நாம் மறந்திருக்கலாம் அதை நினைவுபடுத்துவதற்காக தான் இந்த பதிவு கண்டிப்பாக இதை பயன்படுத்துங்கள் நல்லவித பலனை அனுபவிப்பீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top