அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் நன்மை கிடைக்கும் / Ashwini Natchathiram Favorable kadavul | Ashwini star god :-
நம்முடைய வாழ்க்கையில் நாம் எத்தனை கடவுளை வேண்டினாலும் நம்முடைய ஜாதகத்தின் அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் நமக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார். அந்த கடவுளை நாம் வணங்குவதன் மூலமாகத்தான் நமக்கு மிகப்பெரிய மாற்றங்களை அது நமக்கு கொடுக்கும். அதனால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வணங்கலாம். அதனோடு சேர்த்து உங்கள் நட்சத்திர தேவதையையும் நீங்கள் வணங்க வேண்டும். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வளர்ச்சிகள் கிடைப்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். நூறு சதவீதம் உங்களுக்கு இந்த அஸ்வினி நட்சத்திர தேவதையை வணங்குவதன் மூலமாக கிடைக்கும்.
அஸ்வினி நட்சத்திரம்
ஸ்ரீ சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவியை நீங்கள் தினமும் காலையில் வணங்கி வந்தால் கண்டிப்பாக அன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல் முடிந்தவரை சரஸ்வதி தேவிக்கு பரிகாரங்கள் செய்யலாம் அல்லது சரஸ்வதி தேவியை நினைத்து மந்திரங்கள் சொல்லலாம் அப்படியும் இல்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு என்று சில சிறப்பு கோவில்கள் இருக்கின்றன அங்கு சென்று வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்..